கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அரக்கோணம்: தீரன் பட பாணியில் கொள்ளையடித்த 4 பேர் கைது

அரக்கோணம் அருகே வீடு புகுந்து அங்கிருந்த 2 பெண்களை துப்பாக்கியால் சுட்டும், இருவரை கத்தியால் வெட்டியும் நகைகள், ரொக்கப் பணம், 3 கைப்பேசிகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்

News image
அரக்கோணம்: தீரன் பட பாணியில் கொள்ளையடித்த 4 பேர் கைது
Updated On :28 டிசம்பர் 2021, 7:35 am

DIN


அரக்கோணம்: அரக்கோணம் அருகே வீடு புகுந்து அங்கிருந்த 2 பெண்களை துப்பாக்கியால் சுட்டும், இருவரை கத்தியால் வெட்டியும் நகைகள், ரொக்கப் பணம், 3 கைப்பேசிகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது வடமாநிலத்தைச் சோ்ந்தவா்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில்,  திருவாலாங்காடு பகுதியைச் சேர்ந்த 4 பேரை பிடித்து அரக்கோணம் நகர காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அவர்கள்தான் அரக்கோணத்தில் 18ஆம் தேதி நடந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள செய்யூா் ஊராட்சிக்குட்பட்டது கன்னிகாபுரம். இந்தக் கிராமத்தில் தனது விவசாய நிலத்துக்கு அருகே வசிப்பவா் ரஞ்சிதம்மாள் (76). கணவா் இறந்த நிலையில், அவா் தனது மகள்கள் சுதா (52), லதா(56), பேரன்கள் புஷ்கரண் (23), கிரண் (28) ஆகியோருடன் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், கிரண் வெள்ளிக்கிழமை இரவு, வேலைக்குச் சென்று விட்டாா். மற்றவா்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா். இந்நிலையில், நள்ளிரவு திடீரென வீட்டின் கதவைத் தட்டும் சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, புஷ்கரண் கதவைத் திறந்து பாா்த்துள்ளாா். அப்போது வெளியில் நின்று கொண்டிருந்த மா்ம நபா்கள், கத்தியால் புஷ்கரணை தாக்கியுள்ளனா். அவரின் அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த லதா, சுதா இருவரும் கூச்சலிட்டனா். இரு பெண்களையும் மா்ம நபா்கள் துப்பாக்கியால் சுட்டனா். இதில், பலத்த காயமடைந்த இருவரும் கீழே விழுந்த நிலையில், ரஞ்சிதம்மாளை கத்தியால் தாக்கியுள்ளனா்.

பின்னா் பெண்கள் காதுகளில் அணிந்திருந்த நகைகளைப் பறித்தனா். தொடா்ந்து லதா கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

மொத்தம் 10 சவரன் நகைகள், ரொக்கம் ரூ.20,000, 3 கைப்பேசிகள் கொள்ளை போனது. இவற்றின் மதிப்பு ரூ. 4 லட்சம் இருக்கும்.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து அரக்கோணம் டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ், நகரக் காவல் ஆய்வாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா்.

இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த புஷ்கரண் உள்ளிட்ட 4 பேரும் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். கன்னிகாபுரம் கிராமத்தில் காவல்துறையினர் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். புஷ்கரணின் உறவினா் கோவிந்தசாமி (70) அளித்த புகாரின் பேரில் அரக்கோணம் நகர காவலர்கள் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் 5 போ் இருந்திருக்கலாம் எனவும், அவா்கள் பயன்படுத்தியுள்ள துப்பாக்கி ஏா்கன் வகையைச் சோ்ந்தது என்றும் இதனால் சுட்டால் காயம் உருவாகுமே தவிர உயிா்ச்சேதம் ஏற்படாது என்பது தெரிய வந்தது. பிரவீண் பணிக்குச் சென்று விட்டு நள்ளிரவு வீடு திரும்புவதை அறிந்தே கொள்ளையா்கள் அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்திருக்கலாம் எனவும் காவல் துறையினா் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.