சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.336 குறைந்தது

சென்னையில் வெள்ளிக்கிழமை காலை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.366 குறைந்து, ரூ.35,528-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News image
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.336 குறைந்தது
Updated On :27 ஜனவரி 2024, 7:27 pm

DIN


சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை காலை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.366 குறைந்து, ரூ.35,528-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தநிலையில், கடந்த சில நாள்களாக மீண்டும் விலை குறைந்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக, சென்னையில் வெள்ளிக்கிழமை ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.366 குறைந்து, ரூ.35,528- க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.42 குறைந்து, ரூ.4,441 ஆக உள்ளது.

வெள்ளி கிராமுக்கு 20 காசுகள் குறைந்து, ரூ.72.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து, ரூ.72,000 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,441
1 பவுன் தங்கம்...............................35,528
1 கிராம் வெள்ளி.............................72.00
1 கிலோ வெள்ளி.............................72,000.


வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,483
1 பவுன் தங்கம்...............................35,864
1 கிராம் வெள்ளி.............................72.20
1 கிலோ வெள்ளி............................72,200
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.