இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மருத்துவமனை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமைச் செயலகத்தில், சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 135 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,

News image
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
Updated On :9 பிப்ரவரி 2021, 9:35 am

DIN

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமைச் செயலகத்தில், சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 135 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மதுரை இராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 121 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 110 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்படவுள்ள தரை மற்றும் 6 தளங்கள் கொண்ட டவர் பிளாக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 

மேலும், திருச்செந்தூர் மற்றும் பரமக்குடி அரசு மருத்துவமனைகளில் 10 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ஏழை எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் தங்கு தடையின்றி கிடைக்கவேண்டும் என்ற உயரிய நோக்கில் செயல்படும் தமிழ்நாடு அரசு, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மற்றும் வட்ட மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி வருவதோடு, நவீன மருத்துவக் கருவிகளையும் வழங்கி வருகின்றது.

அந்த வகையில், நகர்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்காக, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகவை நிதி உதவியுடன் 1,634 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு நகர்புற சுகாதாரத் திட்டத்தை தமிழக முதல்வர் பழனிசாமி கடந்த 28.7.2017 அன்று தொடங்கி வைத்தார்கள். இத்திட்டத்தின் கீழ், சென்னை-கீழ்ப்பாக்கம், மதுரை, கோயம்புத்தூர், சேலம், வேலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ஈரோடு, கடலூர் மற்றும் பெரியகுளம் ஆகிய 3 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், ஆவடி, சேலம் - அம்மாபேட்டை, திருப்பூர்-வேலம்பாளையம் மற்றும் திருநெல்வேலி-கண்டியப்பேரி ஆகிய இடங்களில் உள்ள 4 இரண்டாம் நிலை மருத்துவமனைகள் வலுப்படுத்தப்படுகிறது.

அந்த வகையில், சென்னை- கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2,68,817 சதுர அடி பரப்பளவில் தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் 135 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள டவர் பிளாக் கட்டடத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்கள். இக்கட்டடத்தில், 12 அறுவை அரங்கங்கள் மற்றும் ஒரு ஹைப்ரிட் அறுவை அரங்கம், நரம்பியல், இதயம், எஸ்.ஜி.இ , சிறுநீரகம் / மாற்று அறுவை சிகிச்சை, எலும்பியல், பொது அறுவை சிகிச்சை, தீக்காயங்கள் மற்றும் நரம்பியலுக்கான ஹைப்ரிட் அறுவை அரங்கங்களைக் கொண்ட மேம்பட்ட அறுவை அரங்க வளாகம், தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பராமரிப்பு பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய மயக்க தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சை பிரிவு, நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் தீக்காய தீவிர சிகிச்சைப் பிரிவு, இமேஜிங் மையம், அவசர சிகிச்சை பிரிவு மற்றும் சி.எஸ்.எஸ்.டி சேவைகள், புனரமைப்பு அறுவை சிகிச்சை வார்டு, எண்டோஸ்கோபி சூட், அல்ட்ராசவுண்ட் ஆய்வகம் மற்றும் நச்சு சிகிச்சைப் பிரிவு, தீக்காயப் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, இருதய பிரிவு, நெப்ராலஜி பிரிவு, சிறுநீரக பிரிவு, டயாலிசிஸ் / சிஆர்ஆர்டி ஆகிய பிரிவுகள் செயல்படும். இக்கட்டடத்தில் 410 படுக்கைகள் நிறுவப்படும்.

மதுரை, இராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 2,43,061 சதுர அடி பரப்பளவில் தரை தளம் மற்றும் 6 தளங்களுடன் 121 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள டவர் பிளாக் கட்டடத்திற்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்கள். இக்கட்டடத்தில், 22 அறுவை அரங்கங்கள் மற்றும் ஒரு ஹைப்ரிட் அறுவை அரங்கம், இருதயம், வாஸ்குலர், பொது அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, காது மூக்கு தொண்டை, எலும்பியல், கண் மருத்துவம் மற்றும் இருதய / வாஸ்குலருக்கான ஹைப்ரிடு அறுவை சிகிச்சை அரங்கம் கொண்ட மேம்பட்ட அறுவை அரங்க வளாகம், தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பராமரிப்புப் பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய மயக்க தீவிர சிகிச்சைப் பிரிவு, இமேஜிங் சென்டர், சி.எஸ்.எஸ்.டி, அவசர சிகிச்சை துறை மற்றும் கேத் லேப் பிரிவு, இருதயவியல், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, இருதயம் மற்றும் வாஸ்குலர் அறுவை சிகிச்சை ஆகிய வசதிகளுடன் செயல்படும். இந்த டவர் பிளாக்கில் 205 படுக்கைகள் நிறுவப்படும்.

கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2,22,305 சதுர அடி பரப்பளவில் தரை தளம் மற்றும் 6 தளங்களுடன் 110 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள டவர் பிளாக் கட்டடத்திற்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்கள். இக்கட்டடத்தில், 9 அறுவை அரங்கங்கள் மற்றும் 2 ஹைப்ரிட் அறுவை அரங்கங்கள், பொது அறுவை சிகிச்சை, சி.டி.எஸ், இரைப்பை குடல், எலும்பியல், தீக்காயம் மற்றும் சி.டி.எஸ் / வாஸ்குலர், நியூராலஜிக்கான ஹைப்ரிட் அறுவை அரங்க மையம் கொண்ட மேம்பட்ட அறுவை அரங்க வளாகம், தீவிர சிகிச்சைப் பிரிவு, சர்ஜிகல் தீவிர சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பராமரிப்பு பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய மயக்க மருந்து பராமரிப்பு பிரிவு மற்றும் ஸ்டெப்-டவுன் தீவிர சிகிச்சைப் பிரிவு, இமேஜிங் மையம், அவசர சிகிச்சை பிரிவு, சி.எஸ்.எஸ்.டி மற்றும் ஆய்வகம், மருத்துவ இரைப்பை குடல், சர்ஜிக்கல் இரைப்பை குடல் மற்றும் சி.டி.எஸ் போன்ற புறநோயாளிகள் பிரிவுகள், எண்டோஸ்கோபி சூட், பொது வார்டுகள், தீக்காய பிரிவு மற்றும் மருத்துவ இரைப்பை குடல் வார்டுகள் ஆகிய பிரிவுகள் செயல்படும். இந்த கட்டடத்தில் 232 படுக்கைகள் நிறுவப்படும்.

மேலும், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் 5 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள 48 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சை பிரிவு, தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவு, நச்சு முறிவு சிகிச்சை மையம், கண் அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்புப் பிரிவு ஆகிய பிரிவுகள்; இராமாநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு மருத்துவமனையில் 5 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள அவசர சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கம், 30 படுக்கைகள் கொண்ட வார்டு, ஆய்வகம், இரத்த சுத்திகரிப்பு பிரிவு; என மொத்தம் 10 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனைக் கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.