பேரவைக்குள் குட்கா: உரிமை குழுவின் 2வது நோட்டீஸ் ரத்து
பேரவைக்குள் குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய இரண்டாவது நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை: பேரவைக்குள் குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய இரண்டாவது நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பேரவைக்குள் எடுத்து வந்ததாக, 18 திமுக எம்எல்ஏக்கள் மற்றும் கு.க. செல்வத்துக்கு உரிமை மீறல் குழு இரண்டாவது நோட்டீஸ் அனுப்பியது.
உரிமை மீறல் குழுவின் நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா நாராயணன், 2வது நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டார்.
உரிய காரணங்களின்றி சபாநாயகர் பரிந்துரைத்தார் என்ற காரணத்துக்காக மட்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாக திமுக சார்பில் வாதிடப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், உரிமை மீறல் குழுவின் இரண்டாவது நோட்டீஸை ரத்து செய்தது. முதல் நோட்டீஸையும் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...