ஓமலூர்: அதிமுக அலுவலகத்தில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவலர்கள் சோதனை
முதல்வர் பழனிசாமி வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக அலுவலகத்தில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.


ஓமலூர்: முதல்வர் பழனிசாமி வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓமலூர் அதிமுக அலுவலகத்தில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
சேலத்தில் அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக இன்று காலை 100 என்ற எண்ணிற்கு மிரட்டல் வந்தது.
இதனையடுத்து சென்னையில் உள்ள முதலமைச்சர் இல்லத்திலும், சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் உள்ள முதலமைச்சரின் இல்லத்திலும், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சென்று சோதனை செய்து பார்த்தனர். மோப்ப நாய் ஜெனி வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. ஆனால் வெடிபொருள் ஏதும் சிக்கவில்லை.
இந்த நிலையில் தமிழக முதல்வர், திருப்புத்தூரில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்திக்க உள்ளார்.
இன்று காலை முதலமைச்சரின் இல்லத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் வந்ததை அடுத்து, ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்திற்கு கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.
கட்சி அலுவலகம் வந்த அனைவரும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சேலம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...