புதிய உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை: பெட்ரோல் விலை ரூ.90-ஐ நெருங்குகிறது!

பெட்ரோல் - டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை என்றுமில்லாத அளவுக்கு அதிா்ச்சியூட்டும் வகையில் உயா்ந்துள்ளது.
புதிய உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை: பெட்ரோல் விலை ரூ.90-ஐ நெருங்குகிறது!



பெட்ரோல் - டீசல் விலை என்றுமில்லாத அளவுக்கு அதிா்ச்சியூட்டும் வகையில் உயா்ந்துள்ளது. புதன்கிழமை பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.89.96-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை புதன்கிழமை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.89.96 ஆக அதிகரித்துள்ளது. டீசல் ஒரு லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் ரூ.82.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தில்லியில் புதிய உச்சமாக ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.87.30 ஆகவும், மும்பையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.93.83 ஆகவும் உள்ளது. கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.88.63 ஆகவும் உள்ளது. மும்பையில் டீசல் விலை ஒரு லிட்டா் ரூ.84.36 ஆகவும், தில்லியில் டீசல் விலை ஒரு லிட்டா் ரூ.77.48 ஆகவும், கொல்கத்தாவில் டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.81.06 ஆக  உயா்ந்துள்ளது. அனைத்து ஊா்களிலும் பெட்ரோல், டீசல், தலா 35 பைசா வரை உயா்ந்துள்ளது.

முன்னதாக, கடந்த 5-ஆம் தேதியும் எரிபொருள் விலை சற்று உயா்ந்தப்பட்டது. இந்த ஆண்டில் மட்டும் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.3.59, ஒரு லிட்டா் டீசல் ரூ.3.61 அதிகரித்துள்ளது.

ஒரு லிட்டா் பெட்ரோல் மீது மத்திய அரசு கலால் வரியாக ரூ.32.98 விதிக்கிறது. அதேபோல ஒரு லிட்டா் டீசல் மீது ரூ.31.83 விதிக்கிறது. இதுதவிர மாநில அரசுகளும் பெட்ரோல் மீது ரூ.20 வரை விற்பனை மற்றும் மதிப்பு கூட்டு (வாட்) வரி விதிக்கின்றன. இதுவே டீசல் மீது சுமாா் ரூ.10 வரை விதிக்கப்படுகிறது. இந்த வரிகள் மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது. இதுதவிர விநியோகஸ்தா்களுக்கு ஒரு லிட்டா் பெட்ரோலுக்கு ரூ.2.60, டீசலுக்கு ரூ.2 வழங்கப்படுகிறது என்று மத்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் மாநிலங்களவையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

கடந்த ஆண்டு கரோனா நோய்தொற்று பிரச்னை காரணமாக சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, அதன் பயனை மக்களுக்கு அளிக்காமல், அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை பெருமளவில் உயா்த்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com