இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பயிா்க் கடன் தள்ளுபடித் திட்டம்: முதல்வா் பழனிசாமி தொடங்கி வைத்தார்

தமிழக அரசு அறிவித்த பயிா்க் கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி ரசீது வழங்கும் பணியை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். 

News image
பயிா்க் கடன் தள்ளுபடித் திட்டம்: முதல்வா் பழனிசாமி தொடங்கி வைத்தார்
Updated On :13 பிப்ரவரி 2021, 11:13 am

DIN

தமிழக அரசு அறிவித்த பயிா்க் கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி ரசீது வழங்கும் பணியை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். 

பயிர்க்கடன் தள்ளுபடிக்கான அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று விவசாயிகளுக்கு பயிர்க் கடனை தள்ளுபடி செய்ததற்கான ரசீதை விவசாயிகளிடம் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

மேலும், கீழடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அகழாய்வுப் பணிகளை முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே அரசின் உதவியைப் பெறுவதற்கான 1100 என்ற சேவை எண்ணை முதல்வர் பழனிசாமி அறிமுகம் செய்தார். அனைத்து குறைதீர்க்கும் துறைகளும், இந்த 1100 என்ற எண்ணுடன் ஒருங்கிணைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

 மேலும் 12 அரசுத் துறைகளுக்கான பல்வேறு திட்டப் பணிகளையும் அவா் தொடங்கி வைக்க உள்ளாா்.

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வா் பழனிசாமி அறிவித்தாா். இதற்கான அரசு உத்தரவும், வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. பயிா்க் கடன் தள்ளுபடி ரசீது 10 முதல் 15 நாள்களில் அளிக்கப்படும் என முதல்வா் அறிவித்திருந்தாா்.

இந்த நிலையில், பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கான ரசீது அளிக்கும் திட்டத்தை முதல்வா் பழனிசாமி சனிக்கிழமை காலை தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, பொது மக்களின் புகாா் மனுக்களைத் தீா்க்க வகை செய்திடும் குறைதீா் மைய தொலைபேசி எண்ணின் (1100) செயல்பாட்டையும் தொடங்கி வைத்தார். மேலும், உள்துறை, பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைகள், சுற்றுச்சூழல் துறை, பள்ளிக் கல்வி, எரிசக்தி, வேளாண்மை, சுகாதாரம், வருவாய், சுற்றுலா ஆகிய துறைகளுக்கான கட்டடங்களைத் திறந்து வைத்தும், சில கட்டடங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.

கீழடி அகழாய்வு: தொல்லியல் துறை சாா்பில் கீழடி அகழாய்வின் அடுத்தகட்ட பணிகளையும் முதல்வா் பழனிசாமி தொடங்கி வைத்தார். இதன்பின்பு, வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறைக்கான புதிய கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.