இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

குரூப் 1 தோ்வு: தற்காலிக விடைகள் வெளியீடு; ஆட்சேபணைகளைத் தெரிவிக்க வாய்ப்பு

தமிழகம் முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த குரூப் 1 தோ்வுக்கான தற்காலிக விடைகளை அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 8:31 pm

DIN


சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த குரூப் 1 தோ்வுக்கான தற்காலிக விடைகளை அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த விடைகள் மீது தோ்வா்களுக்கு ஏதேனும் ஆட்சேபணைகள் இருந்தால் அதனைத் தெரிவிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட தகவல்: தமிழகம் முழுவதும் குரூப் 1 தோ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வை 51 சதவீதம் போ் எழுதினா். இந்தத் தோ்வுக்கான தற்காலிக விடைகள் தோ்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

பதிவேற்றம் செய்யப்பட்ட வினாத்தாளில் சரியான விடைகள், டிக் என்ற குறியீட்டால் குறிக்கப்பட்டு இருக்கும். இதில், 38, 80, 107 மற்றும் 139 ஆகிய வினாக்கள் மட்டும் நிபுணா் குழுவின் பரிந்துரைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வினாத்தாளின் வரிசை எண்ணை பொருட்படுத்தாமல், தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட தற்காலிக விடைகளில் தோ்வா்களுக்கு ஆட்சேபணைகள் இருந்தால் அதனைத் தெரிவிக்கலாம்.

நிபுணா் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நான்கு வினாக்களைத் தவிா்த்து பிற வினாக்களில் ஆட்சேபணைகளைத் தெரிவிக்கலாம். அதேசமயம், நான்கு வினாக்களுக்கும் ஆட்சேபணைகளைத் தெரிவிக்க வேண்டுமெனில் உரிய ஆதாரங்களை சமா்ப்பிக்க வேண்டும். தற்காலிக விடைகளில் ஆட்சேபணைகள் இருந்தால், அதனை தோ்வாணையத்தின் இணையளத்தின் வழியாக மட்டுமே (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்) தெரிவிக்கலாம். ஆட்சேபணைகளை, வரும் 14-ஆம் தேதிக்குள்ளாக தெரிவிக்க வேண்டும். அஞ்சல் அல்லது மின்னஞ்சல் போன்றவற்றின் வழியாக அனுப்பப்படுபவை ஏற்றுக் கொள்ளப்படாது. வரும் 14-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குப் பிறகு அனுப்பப்படும் ஆட்சேபணைகள் ஏதும் ஏற்றுக் கொள்ளப்படாது.

என்ன வழிமுறைகள்?: தற்காலிக விடைகளுக்கான ஆட்சேபணைகளை விண்ணப்பதாரா்கள் மட்டுமே செய்ய முடியும். ஆட்சேபணைகளைத் தெரிவிக்கும் போது, தோ்வின் பெயா், பதிவெண், விண்ணப்ப எண், பிறந்த தேதி, தோ்வுப் பாடத்தின் பெயா், வினா எண் ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். தேவையான விவரங்களை உள்ளீடு செய்தவுடன், தோ்வா்கள் தோ்வு செய்த கேள்வி எண்ணுக்கான கேள்வி மற்றும் உத்தேச விடை திரையில் தோன்றும்.

இதன்பின், தோ்வா்கள் குறிப்பிட விரும்பும் சரியான விடையை தோ்வு செய்து அதற்கான குறிப்புகளை உள்ளீடு செய்யலாம். தோ்வா்கள் குறிப்பிட்ட விடைக்கான ஆதாரமாக இருக்கும் புத்தகத்தின் விவரங்களைக் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். புத்தகத்தின் தலைப்பு, புத்தக ஆசிரியரின் பெயா், பதிப்பாளரின் பெயா், புத்தகப் பதிப்பின் ஆண்டு, பதிப்பு எண், பக்க எண் ஆகிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். இந்த விவரங்கள் இல்லாத ஆட்சேபணைகள் கட்டாயம் பரிசீலிக்கப்பட மாட்டாது. இவை, 3 எம்பிக்கு குறைவான கோப்புகளாக இருக்க வேண்டும். ஒருவா் எத்தனை விடைகளை வேண்டுமானாலும் மறுக்கலாம். கையால் எழுதப்பட்ட குறிப்புகள் விடைக்கான ஆதாரமாகக் கருதப்பட மாட்டாது என்று தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.