ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் நாளை பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

News image

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு

Updated On :15 ஜூலை 2021, 9:09 am

DIN

புதுவையில் வெள்ளிக்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட இருந்த நிலையில், நோய்த்தொற்று குறையாமல் உள்ளதால், பெற்றோரின் வேண்டுகோளை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பதாக, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, புதுவை மாநிலத்தில் 9,10,11,12-ஆம் வகுப்புகள் மற்றும் அனைத்து கல்லூரிகளும் ஜூலை 16ம் தேதி முதல் திறக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

கல்வித்துறையும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தது.  இந்நிலையில் புதுச்சேரியில் கரோனா நோய்த்தொற்று முழுவதுமாக குறையாத நிலையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது நோய்த்தொற்றை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறி பெற்றோர் கழகம் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் முதலமைச்சர் மற்றும் கல்வித்துறை அமைச்சருக்கு மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை திடீரென துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு வந்த  கல்வித்துறை அமைச்சர். ஏ நமச்சிவாயம், துணைநிலை ஆளுநர் தமிழிசையுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, புதுச்சேரியில் கரோனா நோய்த்தொற்று முழுமையாக குறையவில்லை. பெற்றோர் கழகம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் முதலமைச்சர் மற்றும் கல்வித்துறை அமைச்சருக்கு பள்ளிகள் திறப்பதை ஒத்தி வைப்பது குறித்து பல்வேறு மனுக்கள் வந்ததது. 

அது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று  துணைநிலை ஆளுநரை சந்தித்து இது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

தற்போது புதுச்சேரியில் நோய்த்தொற்று குறையாத நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது தற்போதைக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. நோய்த்தொற்று குறைந்த பின்பு இது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

இதனால் வெள்ளிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.