திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஜூலை 26 முதல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் பிளஸ் 2 முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் சேர ஜூலை 26ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

News image

அமைச்சர் க.பொன்முடி

Updated On :19 ஜூலை 2021, 12:20 pm IST

தமிழகத்தில் பிளஸ் 2 முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் சேர ஜூலை 26ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற பிளஸ் 2 மாணவர்களுக்கான முடிவுகளை இன்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இதையடுத்து கல்லூரி சேர்க்கை குறித்து உயர்கல்வி அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அமைச்சர் பொன்முடி பேசியதாவது,

பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்புவர்கள் வருகின்ற 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்தார்.

முன்னதாக, சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கான பிளஸ் 2 முடிவுகளும் வெளியான பிறகு தான் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெறும் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.