சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

1,212 ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தரப் பணிக்கு மாற்றம்: தமிழக சுகாதாரத் துறை

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 1,212 செவிலியர்கள், நிரந்தரப் பணிக்கு மாற்றப்படுவதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்.
Updated On :27 ஜனவரி 2024, 8:09 pm

DIN


சென்னை: ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 1,212 செவிலியர்கள், நிரந்தரப் பணிக்கு மாற்றப்படுவதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

2015 - 2016-ஆம் ஆண்டு எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவு செய்திருந்த ஒப்பந்த செவிலியர்கள் 1,212 பேருக்கும் பணி நிரந்தரம் செய்யப்படுவதாக தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றி வந்த 1,212 செவிலியர்களின் ஒப்பந்தம் வரும் ஐந்தாம் தேதியுடன் நிறைவு பெறவிருந்த நிலையில், அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நிரந்தரப் பணியாளர்களாக மாற்றப்பட்டுள்ள செவிலியர்கள், மே 10-ஆம் தேதிக்கு முன்னதாக சென்னையில் பணியில் சேர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது கரோனா பேரிடர் தீவிரமடைந்து வருவதால், இவர்களை சென்னையில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை ரூ.15 ஆயிரத்தை ஊதியமாகப் பெற்று வந்த செவிலியர்களுக்கு, இனி ரூ.40 ஆயிரம் ஊதியம் கிடைக்கும். ஒப்பந்தப் பணியாளர்களாக இருந்த தங்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றிய தமிழக அரசுக்கு செவிலியர்கள் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.