சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

'இனி தமிழகம் வெல்லும்': ஸ்டாலின் சுட்டுரையின் முகப்புப் பக்கம் மாற்றம்

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

News image
'இனி தமிழகம் வெல்லும்': ஸ்டாலின் சுட்டுரையின் முகப்புப் பக்கம் மாறியது
Updated On :27 ஜனவரி 2024, 8:11 pm

DIN


தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் பதவியேற்பு விழா இன்று காலை 9 மணிக்குத் தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக 125 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. 

YouTube video thumbnail

மு.க. ஸ்டாலின் எனும் நான்..  மு.க. ஸ்டாலினைப் பற்றி அறிந்து கொள்ள

50 ஆண்டுகள் அரசியல் பொதுவாழ்வுக்குரியவரான மு.க.ஸ்டாலின் முதல்முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அவருக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து துரைமுருகன் உள்பட 33 அமைச்சர்களும் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்தனர்.

முதல்வரானார் மு.க. ஸ்டாலின்.. முழு விடியோ

அவர் முதல்வராக பதவியேற்றுக் கொண்டதை அடுத்து, ஸ்டாலினின் சுட்டுரைப் பக்கத்தின் முகப்புப் பக்கம் மாற்றப்பட்டது. அதில், இனி தமிழகம் வெல்லும் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின், சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி, அண்ணா நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் வெப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.