சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

ஆன்லைன் ரம்மி: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் சட்டத்தை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

News image
ஆன்லைன் ரம்மி: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு
Updated On :7 பிப்ரவரி 2024, 10:08 am

DIN

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் சட்டத்தை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு இளைஞர்கள் பலரும் தங்களது சேமிப்புகளை இழந்தும், தற்கொலைக்கு உள்ளாகியும் வந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யக் கோரி பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை தடை செய்யக்கோரி ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன. 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கான உரிய காரணங்களை விளக்காததால் தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. 

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு தடை விதிக்ககோரி தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.