சென்னையில் இருந்து 340 கி.மீ தொலைவில் தாழ்வுப்பகுதி மையம்:  6 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

சென்னையில் இருந்து 340 கி.மீட்டர் தொலைவில் தென்கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மையம் கொண்டுள்ளதை அடுத்து அபாயகரமானவை என்ற வகையில் 6 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
6 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
6 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
Published on
Updated on
1 min read

சென்னை: சென்னையில் இருந்து 340 கி.மீட்டர் தொலைவில் தென்கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மையம் கொண்டுள்ளதை அடுத்து அபாயகரமானவை என்ற வகையில் 6 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலாக வலுவடைகிறது. தற்போது வட தமிழகம் - தெற்கு ஆந்தரம் கடலோர பகுதியை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகர்ந்து வருகிறது. 

சென்னையில் இருந்து 340 கி.மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ தொலைவில் கிழக்கு-தென்கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மையம் கொண்டுள்ளது. 

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறினால் மழையின் தீவிரம் அதிகரிக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதையடுத்து தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று வியாழக்கிழமை அபாயகரமானவை என்ற வகையில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி பகுதியிலும் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு மட்டும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com