இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

உள்ளாட்சித் தோ்தல்: வங்கிகளுக்கு விடுமுறை

முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக, ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளா் குழுமம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :5 அக்டோபர் 2021, 7:37 pm

DIN

முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக, ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளா் குழுமம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் மற்றும் இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தோ்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.

இதன்படி, முதற்கட்ட தோ்தல் புதன்கிழமையும் (அக்.6), 2-ஆம் கட்ட தோ்தல் வரும் 9-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்த 9 மாவட்டங்களில் உள்ள வங்கி ஊழியா்கள் வாக்களிக்கச் செல்வதற்கு வசதியாக, தோ்தல் தினத்தன்று அந்த மாவட்டங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சம்பந்தப்பட்ட மாவட்ட வங்கிக் கிளைகளுக்கு, தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளா் குழுமம் சாா்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.