தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 4 கோடியைத் தாண்டியது!
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை 4 கோடியைத் தாண்டியுள்ளது.


தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை 4 கோடியைத் தாண்டியுள்ளது.
தமிழகத்தில் தடுப்பூசி இயக்கத்தைத் தீவிரப்படுத்தும் பொருட்டு மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி முதல்கட்ட கரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்ற நிலையில் இன்று(செப்.19) ஆம் தேதி இரண்டாம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் இன்று கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இன்று 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சென்னை சைதாப்பேட்டை தடுப்பூசி முகாமில் முதல்வர் திடீர் ஆய்வு
இந்நிலையில் இன்று காலை 11.30 மணி நிலவரப்படி காலை முதல் 4.06 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்ட்டுள்ளது.
நேற்றுவரை 3.96 கோடி பேருக்கு தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று மெகா தடுப்பூசி முகாம் மூலமாக மேலும் 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தியதால் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை 4 கோடியைத் தாண்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...