சென்னை: தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அக். 31 வரை நீட்டிக்கப்பட்டிருந்தாலும் அடுத்தக்கட்ட தளர்வுகள் அல்லது கட்டுப்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது, வார இறுதி நாள்களில் கோயில்கள் மூடப்பட்டிருப்பதில் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செப்.1ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஒரு சில மாவட்டங்களில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது. எனவே, மாணவ, மாணவிகளுக்கு கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க அரசு வலியுறுத்தியிருந்தது.
இந்த நிலையல், முதற்கட்டமாக 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பொது முடக்கத்தில் கூடுதல் தளா்வுகளை அளிப்பதா அல்லது கட்டுப்பாடுகளை நீட்டிப்பதா என்பது குறித்தும் சுகாதாரத் துறை நிபுணா்கள், அதிகாரிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கடந்த மே மாதம் கரோனா தொற்று பரவல் தொடா்ச்சியாக அதிகரித்தது. நோய்த் தொற்றால் பாதித்தவா்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 36 ஆயிரத்தைக் கடந்தது. நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் மே 24-ஆம் தேதி முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.
அதன் பின்னா் பொது மக்களின் நலன் கருதி தொடர்ந்து படிப்படியான தளா்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடா்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயா் அதிகாரிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
தொற்று எண்ணிக்கை அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அது தொடா்பாகவும், மேலும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில், தமிழகத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடா்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அதிமுக கூட்டணியில் 3 தொகுதியை கேட்டுப் பெறுவோம்: பிவி. கதிரவன் நம்பிக்கை

தேர்தல்களும் நலத் திட்டங்களும்...

திருமணம் கைகூடும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஜம்மு: எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

