இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பள்ளிகள் திறப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் புதன்கிழமை ஆலோசனை நடத்தி வருகிறார்.

News image
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
Updated On :29 செப்டம்பர் 2021, 10:26 am

DIN

தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதன்கிழமை ஆலோசனை நடத்தி வருகிறார்.

கரோனா பரவல் காரணமாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 2020 மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

தற்போது கரோனா குறைந்துள்ள நிலையில் பெற்றோர்கள், கல்வியாளர்களின் ஆலோசனைக்கு பிறகு நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.