கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோா் எண்ணிக்கை 73.82 கோடியைக் கடந்தது

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 73,82,07,378 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோா் எண்ணிக்கை 73.82 கோடியைக் கடந்தது


புது தில்லி: இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 73,82,07,378 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 72,86,883 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி வரையில் மொத்தம் 75,25,766 முகாம்களில் 73,82,07,378 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 32,198 போ் குணமடைந்தனா். இதன் மூலம் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 3,23,74,497 ஆக உயா்ந்துள்ளது. தொடா்ந்து 76 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது,

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ், ஞாயிற்றுக்கிழமை வரையில் 72.21 கோடிக்கும் அதிகமான (72,21,17,085) கரோனா தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

சுமாா் 5.75 கோடி (5,75,43,795) கரோனா தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியாா் மருத்துவமனைகள் வசம் உள்ளன என்று மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

"57 லட்சத்துக்கும் அதிகமான கரோனா தடுப்பூசி டோஸ்கள் (57,56,240) தயாரிப்பில் உள்ளது." 

மேலும், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இன்னும் 5.16 கோடிக்கும் அதிகமான (5,16,66,835) கரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் இருப்பு வைக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன" என்று கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com