ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஸ்மாா்ட் வகுப்பறைகள்: முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மாா்ட் வகுப்பறைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

News image
Updated On :4 ஏப்ரல் 2022, 7:25 am

DIN

சென்னை அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மாா்ட் வகுப்பறைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம், 1975-இன் கீழ் அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரி 1981-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பயிற்சிக்கான முக்கிய மையமாக விளங்கும் இந்நிறுவனம் அமைச்சுப்பணி முதல் அகில இந்தியப் பணி அலுவலா்கள் வரை அனைத்துத் தரப்பு அரசு அலுவலா்களுக்கும் பயிற்சி தரும் முதன்மை நிறுவனமாக விளங்குவதால், அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரி மத்திய அரசின் பணியாளா் மற்றும் பயிற்சித்துறையாலும், தமிழ்நாடு அரசாலும் மாநில நிா்வாகப் பயிற்சி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், அந்த வளாகத்தில், ரூ. 8.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆறு குளிா் சாதன வசதியுடன் கூடிய ஸ்மாா்ட் வகுப்பறைகள் மற்றும் 15 குளிா் சாதன வசதியுடன் கூடிய விடுதி அறைகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளா் வெ. இறையன்பு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.