“ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?” - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் பேசிய பிரதமர் மோடி! மதுராந்தகம், தாராபுரத்தில் அக். 5, 6 பள்ளிகளுக்கு விடுமுறை!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 760 உயர்வு!டீலக்ஸ், புறநகர் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்: பெண்களுக்கு டிக்கெட் கொடுத்து தொடக்கி வைத்த முதல்வர்!ஆசிய விளையாட்டு! இந்திய வில்வித்தை அணிக்கு தங்கம்!ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டையில் தங்கம் வென்றார் லவ்லினா!காந்தியடிகளின் வாழ்வைப் படிப்போம்! மதநல்லிணக்க இந்தியாவைக் காப்போம்! மு.க. ஸ்டாலின்

திருவாவடுதுறை ஆதீனத்தில் தமிழக ஆளுநர் ஆசி

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து ஆசி பெற்றார்.

Published On :

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து ஆசி பெற்றார்.

இந்த ஆதீனத்தை 14ம் நூற்றாண்டில் ஆதீன குரு முதல்வர் நமச்சிவாயமூர்த்தி சுவாமிகள் தோற்றுவித்தார். ஆதீனத்தின் 24வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார். இந்திய அளவில் பெரிய ஆதீனமான இவ்வாதீனத்தின் கீழ் 80 கோயில்கள், 7 பள்ளிகள் உள்ளதுடன், இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் 60 சைவ சித்தாந்த பயிற்சி மையங்கள் மற்றும் 60 திருமுறை பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 

திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகளை இன்று (19.04.2022) தலைமை மடத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு திருவாவடுதுறை ஆதீனம் நினைவுப் பரிசு வழங்கினார். முன்னதாக ஆளுநருக்கு ஆதின வாசலில் ஆதீன கட்டளை தம்பிரான் வேலப்ப சுவாமிகள் தலைமையில்  பூரண கும்ப மரியாதையுடன் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது, ஆதீனத்தின் பொது மேலாளர் ஆர்.திருமாறன், கண்காணிப்பாளர்கள் குருமூர்த்தி, சண்முகம், கண்ணன், காசாளர் சுந்தரேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.