சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 568 சரிவு!
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 568 குறைந்து ரூ. 37,904-க்கு விற்பனை ஆகிறது.


சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 568 குறைந்து ரூ. 37,904-க்கு விற்பனை ஆகிறது.
கடந்த சில மாதங்களாக தங்கம் விலையில் ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவந்தது.
இந்நிலையில் ரஷ்யா-உக்ரைன் போர்ச் சூழல் காரணமாகவும் பங்குச்சந்தை சரிவின் காரணமாகவும் கடந்த இரு தினங்களாக தங்கம் விலை எதிர்பாராதவகையில் உயர்ந்தது. வெள்ளிக்கிழமை ஒரேநாளில் சவரனுக்கு ரூ. 1,856 உயர்ந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 568 சரிந்து ரூ. 37,904-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 71 சரிந்து ரூ. 4,738-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து ரூ. 69-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 69,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...