தமிழக மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது: முதல்வர்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் காவல் ஜனவரி 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் காவல் ஜனவரி 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீனவா்கள் 43 போ் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் 12 போ் என மொத்தம் 55 பேரை, கடந்த சில நாள்களுக்கு முன்பு எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதனிடையே மீனவ சங்கங்கள் மற்றும் உறவினா்களின் கோரிக்கையை ஏற்ற மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் முதற்கட்டமாக ராமேசுவரம் பகுதியைச் சோ்ந்த 12 மீனவா்கள், இலங்கைச் சிறையிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டனா்.
இந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் காவல் ஜனவரி 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. மீனவர்களை உடனே விடுவிக்க, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...