ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தமிழகத்தில் பொதுமுடக்கம் எதிரொலி:  கேரள எல்லைகள் அடைப்பு

தமிழகத்தில் பொதுமுடக்கம் எதிரொலியாக தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்குச் செல்லும் குமுளி, கம்பம்மெட்டு மலைச்சாலைகள் அடைக்கப்பட்டன.

News image
தமிழகத்தில் பொதுமுடக்கம் எதிரொலி:  கேரள எல்லைகள் அடைப்பு
Updated On :16 ஜனவரி 2022, 8:39 am

DIN

கம்பம்: தமிழகத்தில் பொதுமுடக்கம் எதிரொலியாக தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்குச் செல்லும் குமுளி, கம்பம்மெட்டு மலைச்சாலைகள் அடைக்கப்பட்டன.

தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்குச் செல்லும் மலைச்சாலைகளான குமுளி, கம்பம்மெட்டு பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடியில் தடை அமைக்கப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது, மேலும் காய்கனி, பால் போன்ற அத்தியாவசிய பொருள்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.

கம்பம், கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் எந்த வாகனங்களும் இயங்கவில்லை, கடைகள், உழவர் சந்தை, தினசரி மார்க்கெட், இறைச்சி கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் இறைச்சிக் கடை உரிமையாளர்களின் வீட்டிலிருந்து இறைச்சி தேவைப்படுவோருக்கு கொண்டு சென்று வழங்கப்பட்டது. காவலர்கள் முக்கிய வீதிகள் வழியாக ரோந்து சென்றனர்.

அதே நேரத்தில் தேனி மாவட்ட எல்லையில் உள்ள கேரள மாநிலத்தில் குமுளி, கம்பம் மெட்டு ஆகிய பகுதிகளில் இயல்புநிலை இருந்தது. கம்பம் நகரில் முக்கிய தெரு மற்றும் சாலைகளை காவலர்கள் அடைத்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.