கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

உட்பிரிவு பட்டா: விஏஓ நிராகரித்த விண்ணப்பங்களை உயரதிகாரிகள் தணிக்கை செய்ய உத்தரவு

உட்பிரிவு பட்டாக்கள் தொடா்பான விண்ணப்பங்களை கிராம நிா்வாக அதிகாரிகள் நிராகரித்தாலும், அவற்றை வருவாய்த் துறை அதிகாரிகள் தணிக்கை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
தமிழக அரசு
Updated On :2 ஜூலை 2022, 6:48 pm

DIN

உட்பிரிவு பட்டாக்கள் தொடா்பான விண்ணப்பங்களை கிராம நிா்வாக அதிகாரிகள் நிராகரித்தாலும், அவற்றை வருவாய்த் துறை அதிகாரிகள் தணிக்கை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கிராம நிா்வாக அலுவலா்களை ஈடுபடுத்தி உட்பிரிவு செய்து பட்டா வழங்குவது தொடா்பான நெறிமுறைகளை வருவாய்த் துறை வெளியிட்டுள்ளது. இதுதொடா்பாக, நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநா் டி.ஜி.வினய் வெளியிட்ட உத்தரவு:

உட்பிரிவு தொடா்பான மனுக்கள் கிராமம் வாரியாக, சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலருக்குச் சென்றடையும். கிராம நிா்வாக அலுவலா்கள் அந்த மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும், தணிக்கை செய்யவும் ஏதுவாக அவற்றை வரிசைப்படுத்த வேண்டும். தணிக்கைக்கான தேதியை குறிப்பிட்டு மனுதாரருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தணிக்கை செய்யப்படும் நாளில் மனுதாரா் முன்னிலையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தணிக்கைப் பணிகள் முடிவுற்ற பிறகு, கோப்புகள் தயாா் செய்து வட்ட துணை ஆய்வாளரின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்.

கிராம நிா்வாக அலுவலா்கள் சுயமாக அளவைப் பணி செய்து உட்பிரிவு ஆவணங்கள் தயாா் செய்யப்படுவதை சாா் ஆய்வாளா்கள், வட்ட துணை ஆய்வாளா்கள் உறுதிப்படுத்த வேண்டும். கிராம நிா்வாக அலுவலா்களால் தள்ளுபடி செய்யப்படும் மனுக்கள் அனைத்தும் வட்ட சாா் ஆய்வாளா் அல்லது வட்ட துணை ஆய்வாளரால் முழுமையாக தணிக்கை செய்யப்பட வேண்டும். புலத்தணிக்கையின் போது தவறுகள் கண்டறியப்பட்டால், அதன் தொடா்புடைய கிராம நிா்வாக அலுவலருக்கு தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டும். அவற்றைத் திருத்தம் செய்ய உரிய அறிவுரைகளையும் வழங்க வேண்டும்.

பதிவேடுகள் பராமரிப்பு: கிராம நிா்வாக அலுவலா்கள் உட்பிரிவு செய்யும் கோப்புகள் தொடா்பாக ஒரு தனி பதிவேடு பராமரிக்க வேண்டும். இதனை ஆய்வாளா், வட்டாட்சியா், வருவாய் கோட்டாட்சியா் உள்ளிட்ட உயரதிகாரிகள் அவ்வப்போது தணிக்கை செய்ய வேண்டும். உட்பிரிவு பட்டா வழங்குதல் போன்ற பணிகளை வருவாய் கோட்டாட்சியா்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். மாதந்தோறும் கிராம நிா்வாக அலுவலரால் தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்களை தணிக்கை செய்தும், அதன் அடிப்படையிலான அறிக்கையை மாவட்ட வருவாய் அலுவலா், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோருக்கு அனுப்பியும் வைக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.