சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

ஒரே இடம்.. காட்சிகள் மட்டும் மாற்றம்: திருப்பூர் சாலையோர பள்ளம் படுத்தும்பாடு

திருப்பூர் - பல்லடம் அருகே ராயர்பாளையத்தில் சாலையோரம் இருக்கும் ஒரு பள்ளத்தால், தொடர்ந்து அங்கு விபத்துகள் நேரிட்டு வருவது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

News image
ஒரே இடம்.. காட்சிகள் மட்டும் மாற்றம்: திருப்பூர் சாலையோர பள்ளம் படுத்தும்பாடு
Updated On :1 பிப்ரவரி 2024, 9:44 am

DIN


திருப்பூர் - பல்லடம் அருகே ராயர்பாளையத்தில் சாலையோரம் இருக்கும் ஒரு பள்ளத்தால், தொடர்ந்து அங்கு விபத்துகள் நேரிட்டு வருவது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு மகன்கள் தனித்தனியாக இந்த பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கியுள்ளனர். 

திருப்பூரைச் சேர்ந்த அருண் - சசி என்ற சகோதரர்கள், இருசக்கர வாகன்ததில் இன்று காலை பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்த போது, ராயர்பாளையத்தில் சாலையோரம் இருந்த பள்ளத்தால், தவறி விழுந்து விபத்துக்குள்ளாகினர். இருவரும் காயங்களுடன் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்த அவர்களது தந்தை, மகன்களின் வாகனம் விபத்துக்குள்ளான அதே ராயர்பாளையத்தில், சற்று தொலைவில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானார். இந்த விபத்துக்காட்சி வெளியாகியிருக்கிறது.

இதே இடத்தில்தான், இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஒரு மாணவி நடந்து சென்ற போது, அதே பள்ளத்தால், இருசக்கர வாகனம் அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்வாறு தொடர் விபத்துகளை ஏற்படுத்தும் சாலைப் பள்ளங்களைக் கூட சீர் செய்யாமல் இருப்பது குறித்து பொதுமக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.