தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஈஆர். ஈஸ்வரன் வாழ்த்து

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி கே.பழனிசாமிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஆர். ஈஸ்வரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

News image
Updated On :11 ஜூலை 2022, 9:59 am

DIN

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி கே.பழனிசாமிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஆர். ஈஸ்வரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீா்ப்பு வழங்கியுள்ள நிலையில்,  சென்னை உயா்நீதிமன்றமும் பொதுக்குழுவை கட்சி விதிகளுக்கு உள்பட்டு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு இன்று காலை நடைபெற்றது. 

அதில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் பொதுக்குழுவில் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி கே.பழனிசாமிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஆர். ஈஸ்வரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், அதிமுக- வின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றிருக்கின்ற எடப்பாடி கே.பழனிசாமிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.