புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திமுகவின் கைக்கூலி, தரம் தாழ்ந்த மனிதர் ஓபிஎஸ்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

திமுகவுடன் கைகோர்த்துக்கொண்டு தரம் தாழ்ந்த மனிதராக ஓபிஎஸ் செயல்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

News image
ஜெயக்குமார்
Updated On :11 ஜூலை 2022, 8:11 am

DIN

திமுகவுடன் கைகோர்த்துக்கொண்டு தரம் தாழ்ந்த மனிதராக ஓபிஎஸ் செயல்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓபிஎஸ் இன்று மிகவும் தரம் தாழ்ந்த செயலில் ஈடுபட்டுள்ளார். அவரது செயலை யாரும் ஏற்க மாட்டார்கள். 

எம்ஜி ஆர் உருவாக்கிய தலைமை அலுவலகத்தில் தடாலடியாக நுழைந்து ஆவணங்களை கைப்பற்றியிருக்கிறார். அவர் திமுகவின் கைக்கூலியாக செயல்படுகிறார். 

அவரது இந்த தரம் தாழ்ந்த செயல் கண்டனத்திற்குரியது மற்றும் வெட்கத்திற்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

முன்னதாகவே, சமூக விரோதிகள் நுழைவார்கள், பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என காவல்துறையிடம் கூறியுள்ளோம். ஆனால், திமுக, ஓபிஎஸ்ஸை கைக்குள் போட்டுகொண்டு இந்த வேலையை செய்துள்ளது. 

திமுகவின் உள்கட்சி விவகாரத்தில் அதிமுக தலையிடவில்லை. ஆனால், திமுக ஓபிஎஸ்ஸுடன் கைகோர்த்துள்ளது.

எத்தனை ஸ்டாலின் வந்தாலும், ஓபிஎஸ் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்யமுடியாது. 

அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது குறித்து சட்டப்படி எதிர்கொள்வோம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.