ஏனாம் பிராந்தியத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, ஏனாம் பிராந்தியத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


புதுச்சேரி: கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, ஏனாம் பிராந்தியத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை மாநிலத்துக்குள்பட்ட ஏனாம் பிராந்தியம், ஆந்திர மாநிலம், கோதாவரி ஆறு பாயும் பகுதியில் அமைந்துள்ளது. தற்போது கோதாவரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால், இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏனாம் பிராந்திய பகுதிகளில் சூழ்ந்தது.
இதையும் படிக்கலாம்: மகாராஷ்டிரத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
கோதாவரி ஆற்றில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏனாம் பிராந்தியத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய விடுமுறைக்கு பதில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்று ஏனாம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...