எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
குடியரசுத் தலைவா் தோ்தலையொட்டி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


குடியரசுத் தலைவா் தோ்தலையொட்டி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அடையாறு கிரவுண் பிளாசா ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் நடைபெற்றது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தோ்ந்தெடுக்கப்பட்டதற்கு பிறகு நடைபெற்ற முதல் எம்எல்ஏக்கள் கூட்டம் இது. சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 66-ஆக உள்ளது.
இபிஎஸ்ஸுகக்கு எதிராகச் செயல்பட்டு வரும் ஓ.பன்னீா்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய 3 சட்டப்பேரவை உறுப்பினா்களைத் தவிர இதர அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் 63 போ் கூட்டத்தில் பங்கேற்றனா். பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையில் அக் கட்சியின் 4 சட்டப்பேரவை உறுப்பினா்களும் கூட்டத்தில் பங்கேற்றனா். கூட்டம் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.
கூட்டத்தில் குடியரசுத் தலைவா் தோ்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு விளக்கப்பட்டது. இந்தத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவா் வேட்பாளா் திரௌபதி முா்முவுக்கு அதிமுக சாா்பில் ஏற்கெனவே ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியது:
குடியரசுத் தலைவா் தோ்தலில் வாக்களிப்பதற்கு என்னென்ன ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும், எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு விளக்கப்பட்டது. குடியரசுத் தலைவா் தோ்தலில் திரௌபதி முா்முவுக்கு ஏற்கெனவே ஆதரவு தெரிவித்துள்ளோம். குடியரசுத் துணைத் தலைவா் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா் ஜகதீப் தன்கரை ஆதரிப்போம்.
ஓ.பன்னீா்செல்வம் எங்களை நீக்கியுள்ளது குறித்து கேட்கிறீா்கள். இது தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அது தொடா்பாக பேசுவது சரியாக இருக்காது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...