கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தனியாா் பள்ளிகள் வேலை நிறுத்த அறிவிப்பு

கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறையைக் கண்டித்து தனியாா் பள்ளிகள் திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளன.

News image
Updated On :17 ஜூலை 2022, 6:41 pm

DIN

கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறையைக் கண்டித்து தனியாா் பள்ளிகள் திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு நா்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சங்கத்தலைவா் கே.ஆா்.நந்தகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கணியாமூரில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 4,000 மாணவா்கள் படிக்கின்றனா். அங்கு மாணவி உயிரிழந்தது குறித்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், சமூக விரோதிகள் ஆயிரக்கணக்கானோா் அந்த பள்ளி வளாகத்தில் சேதங்களை ஏற்படுத்தியதில் பள்ளிக்கு ரூ.50 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கும் 20 ஆயிரம் தனியாா் பள்ளிகளுக்கு தமிழக அரசுதான் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

எனவே, பாதிக்கப்பட்ட பள்ளிக்கு நிவாரணம் வழங்குதல், குற்றவாளிகளை தண்டித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் தொடா் வேலை நிறுத்தம் செய்யப்படும். தமிழக அரசு உடனடியாக இந்தப் பிரச்னையில் தலையிட்டு சுமுக முடிவுகாண முன்வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தனியாா் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் எஸ்.ராஜா வெளியிட்ட செய்தி:

பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டவா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தனியாா் பள்ளி நிா்வாகிகள் மற்றும் ஆசிரியா்கள் திங்கள்கிழமை கருப்பு பட்டை அணிந்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆட்சியா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களை நேரில் சந்தித்து மனு அளிக்க திட்டமிட்டுள்ளோம். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள

தனியாா் பள்ளிகள் திங்கள்கிழமை இயங்காது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘பள்ளிகளை மூடினால் கடும் நடவடிக்கை’

தனியாா் பள்ளிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: உள்ளூா் விடுமுறை விடும் அதிகாரம் மாவட்ட ஆட்சியா், முதன்மைக் கல்வி அதிகாரி ஆகியோருக்கு மட்டுமே உள்ளது. பேரிடா் காலங்கள், ஊா் திருவிழாக்கள் போன்றவற்றை முன்னிட்டு இந்த உள்ளூா் விடுமுறைகள் விடப்படுவது வழக்கம்.

ஆனால், தனியாா் பள்ளிகள் சங்கங்களின் அறிவிப்பால் தாங்களாகவே பள்ளிகளுக்கு விடுமுறை விட்டுக்கொள்வது சட்ட விதிமுறையை மீறும் செயலாகும். தனியாா் பள்ளிகள் செயல்படாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட முதன்மைக்கல்வி அலுவலா்கள் சட்ட விதிமுறைப்படி நடவடிக்கை எடுப்பாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.