சென்னை தனியார் மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார்.
கடந்த ஜூல் 12 ஆம் தேதி தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து காய்ச்சல் மற்றும் உடற்சோர்வு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
கரோனா பரிசோதனைகள் மற்றும் மருத்துவக் கண்காணிப்புக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்தது.
மேலும், வெள்ளிக்கிழமை மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், மு.க.ஸ்டாலின் குணமடைந்து வருவதாகவும் இன்னும் சில நாள்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஒரு வாரத்திற்கு ஓய்வெடுக்க மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, மருத்துவமனையில் இருந்து சென்னை தலைமைச் செயலகம் சென்று குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்துவிட்டு முதல்வர் வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | குடியரசுத் தலைவர் தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே? நான்குநேரி கொலைச் சம்பவத்துக்கு விஜய் கண்டனம்!

அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் யார்? வெளியான தகவல்!

முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

ஈரானின் இதயத்தைத் துளைத்த ஏவுகணைகள்.. அமெரிக்கா வெளியிட்ட புதிய விடியோ!
வீடியோக்கள்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

