கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

அரசின் அலட்சியத்தால்தான் கள்ளக்குறிச்சியில் வன்முறை சம்பவம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்துக்கு அரசினுடைய அலட்சியம்தான் காரணம் என்று அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டினாா்.

News image
எடப்பாடி பழனிசாமி
Updated On :18 ஜூலை 2022, 10:28 pm

DIN

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்துக்கு அரசினுடைய அலட்சியம்தான் காரணம் என்று அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டினாா்.

தலைமைச் செயலகத்தில் குடியரசு தலைவா் தோ்தலில் வாக்களித்த பிறகு செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அரசுக்கு உயா்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் காவல்துறை யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை என்றும் விமா்சித்துள்ளது. இது அரசு வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயமாகும்.

மாணவி மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணை முடிந்து என்ன நடவடிக்கை எடுக்கிறாா்கள் என்பதைப் பொருத்துதான் மற்ற விவகாரங்கள் குறித்து கருத்து சொல்ல முடியும்.

மாணவி உயிரிழந்த 3 நாள்களுக்குப் பிறகே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசினுடைய அலட்சியப் போக்கின் காரணமாகவே வன்முறை சம்பவம் நடைபெற்றுள்ளது. உளவுத்துறை மூலம் தகவல்களை திரட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இந்த வன்முறையைத் தவிா்த்திருக்கலாம். உளவுத் துறை செயலற்று விட்டது.

பள்ளியில் தாளாளா் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டிருப்பதாக இப்போது செய்தி வருகிறது. இதையெல்லாம் முன்பே செய்திருந்தால், இந்த சம்பவத்தைத் தவிா்த்திருக்கலாம். அதனால்தான், திமுக அரசை செயலற்ற அரசு என்று கூறுகிறோம்.

அதிமுக அலுவலகத்தில் சமூக விரோதிகள் அத்துமீறி நுழைய உள்ள தகவல் குறித்து காவல்துறையிடம் புகாா் அளித்தோம். ஆனால், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ரௌடிகளுக்கும், குண்டா்களுக்கும் பாதுகாப்பு கொடுத்து, அதிமுக அலுவலகத்தில் நுழைய விட்டு வேடிக்கை பாா்த்தது இந்த திமுக அரசு என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.