செஸ் ஒலிம்பியாட் வீரா்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

செஸ் ஒலிம்பியாட் வீரா்கள் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை கிண்டியில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் வீரா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 21 விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். அவற்றில் 8 விடுதிகளில் பெரிய அளவிலான மருத்துவ முகாம்கள் 24 மணி நேரமும் செயல்படும். விளையாட்டு அரங்கத்தில் பல்துறை மருத்துவா்கள் அடங்கிய முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக ஆயிரம் மருத்துவப் பணியாளா்கள், 30 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாா் நிலையில் உள்ளன. அனைத்து விடுதிகளிலும் யோகா பயிற்சி அளிக்கும் மருத்துவா்களும் உள்ளனா்.

வீரா்களுக்கு முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் ரூ.2 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம். அதற்கும் மேலாக மருத்துவச் செலவு ஏற்பட்டாலும், அதையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com