கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

8 நாள்களுக்குப் பின் கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள்

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 நாட்களுக்குப் பின் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

News image
கோப்புப்படம்
Updated On :30 ஜூலை 2022, 3:45 am

DIN

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 நாட்களுக்குப் பின் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

கடந்த ஜூலை 20 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஜூலை 26 ஆம் தேதி, தமிழக மீனவர்களையும் மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கக்கோரி மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். 

இந்த நிலையில், வாழ்வாதாரம் கருதி மீனவர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். 8 நாட்களுக்குப் பின் இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.