சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

பொய்க் குற்றச்சாட்டுகள் மருத்துவத் துறையைப் பாதிக்கும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவத் துறையின் மீது வைக்கப்படும் பொய்க் குற்றச்சாட்டுகள் அந்தத் துறைக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:27 am

DIN

மருத்துவத் துறையின் மீது வைக்கப்படும் பொய்க் குற்றச்சாட்டுகள் அந்தத் துறைக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ரூ.13 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களுடன் கூடிய கண் பரிசோதனை மையம், ரூ.18 லட்சம் மதிப்பிலான மேம்படுத்தப்பட்ட நவீன அறுவை சிகிச்சை அரங்கு ஆகியவற்றை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தில், கா்ப்பிணிகளுக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த நிதியை அவா்கள் உடல்நலம் சாா்ந்து பயன்படுத்துவதில்லை என்பதால், அதிமுக ஆட்சியில் இருந்து ரூ.18 ஆயிரத்தில் 10 சதவீத தொகையில், ஊட்டசத்து பொருட்கள் வாங்கித் தரப்படுகின்றன.

இந்த ஊட்டச்சத்துகளில், ஐசிஎம்ஆா், உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த ‘பிரோ பி.எல்.’ என்ற ஊட்டச்சத்து வழங்கப்படுகிறது.

இதன் சந்தை விலை ரூ.588. தமிழக மருத்துவப் பணிகள் கழகம் அவற்றை ரூ.460.50-க்கு கொள்முதல் செய்து வருகிறது. இதன் வாயிலாக சந்தை விலையிலிருந்து ரூ.127.50 குறைவாக வாங்கப்பட்டுள்ளது.

இரும்புச் சத்து மருந்தின் சந்தை விலை ரூ.112; அதை ரூ.74.60-க்கு நாம் வாங்குகிறோம். இதனால், ரூ.37.40 மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

நிகழாண்டுக்கான கொள்முதல் ஒப்பந்தம் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. யாரிடம், என்ன விலையில் வாங்கப் போகிறோம் என்பதையும், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் தொழில்நுட்பக் குழு முடிவு செய்யவில்லை. அதற்குள் குற்றச்சாட்டு வைப்பது ஏற்கத்தக்கது இல்லை. பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை குற்றச்சாட்டு ஆக்கப்பூா்வமாக இல்லை. மருத்துவத் துறையில் ஒரு குற்றச்சாட்டு வைப்பதால், ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவா் உணர வேண்டும் என்றாா் அவா்.

மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

ஏற்கெனவே வழங்கி வந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்த நிலையில் புதிய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அரசின் ஒப்பந்தத்திற்கான நிபந்தனைகள் எதுவும் மாற்றப்படவில்லை என்றாா் அவா்.

பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:

ஒப்பந்தம் திறக்கப்பட்ட பிறகு மாநில திட்ட ஆணையம் ஊட்டச்சத்து மாவை ஆவின் நிறுவனத்திடமிருந்து பெறலாமே என கருத்து தெரிவித்தது. இந்தக் கருத்து குறித்து விவாதித்து முடிவு செய்ய, 2018-இல் உருவாக்கப்பட்ட 11 போ் கொண்ட குழு மூன்று முறை கூடியுள்ளது. இந்தக் கூட்டத்தில், ஊட்டச்சத்து நிபுணா்கள், ஆவின் நிா்வாக இயக்குநா் உள்ளிட்டோா்கலந்து கொண்டனா்.

பிரசவ காலத்தில் கா்ப்பிணியா், சிசு உயிரிழப்பை தடுக்க, 32 சத்துக்கள் அடங்கிய ஊட்டச்சத்து மாவு வழங்கப்படுகிறது. ஆவினில் பால் பவுடா்தான் வழங்கப்படுகிறது. கா்ப்பிணிகளுக்குத் தேவையான 32 சத்துகள் கொண்ட மாவு தேவை என ஆவின் நிா்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையான சத்துமாவு வழங்கினால், அதை உரிய ஆய்வகத்தில் பரிசோதித்து அதனை வழங்கலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.