சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

ஜவ்வாது மலை புதூர் நாடு பகுதியில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து; இருவர்பலி

ஜவ்வாது மலை புதூர்நாடு பகுதியில் நிலத்தை உழுது விட்டு வீடு திரும்பிய போது விபரீதம். 15 அடி பள்ளத்தில் டிராக்டர்  கவிழ்ந்து இரண்டு பேர் பலி.

News image
ஜவ்வாது மலை புதூர் நாடு பகுதியில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து; இருவர்பலி
Updated On :1 பிப்ரவரி 2024, 9:31 am

DIN

ஜவ்வாது மலை புதூர்நாடு பகுதியில் நிலத்தை உழுது விட்டு வீடு திரும்பிய போது விபரீதம். 15 அடி பள்ளத்தில் டிராக்டர்  கவிழ்ந்து இரண்டு பேர் பலி.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அங்கநாத வலசை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் ஜவ்வாது மலை புதூர் நாடு மலைப்பகுதியில் தன்னுடைய டிராக்டரை எடுத்துக் கொண்டு நிலத்தை உழுது விட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது சித்தூர் பகுதியை சேர்ந்த மணி என்பவர் தன்னை புதூர் நாடு பகுதியில் இறக்கி விடுமாறு கேட்டு டிராக்டரில் ஏறி உள்ளார். 

இந்நிலையில் சித்தூர் கூட் ரோடு பகுதியில் டிராக்டர் வந்து கொண்டிருந்த போது டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து பக்கத்தில் உள்ள 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததால் டிராக்டரின் உரிமையாளர் கோவிந்தசாமி மற்றும் அதில் உடன் வந்த மணி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

பின்பு தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர், இருவரின் சடலத்தையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதே போல் புதூர் நாடு மலை பகுதியில் கோவிலுக்குச் சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 11 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.