மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோயில் வளாக ஆக்கிரமிப்புகளை அகற்றுக: பக்தர்கள் கோரிக்கை

மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோயில் வளாகத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோயில் வளாகத்தில் நடைபாதையில் கடை விரித்துள்ள வியாபாரிகள்.
மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோயில் வளாகத்தில் நடைபாதையில் கடை விரித்துள்ள வியாபாரிகள்.


மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோயில் வளாகத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேட்டூர் அணையை காக்கும் காவல் தெய்வமாக அணைக்கட்டு முனியப்பனை மக்கள் வணங்கி வருகின்றனர். மேட்டூர் அணை நிரம்பினால் அணைக்கட்டு முனியப்பனுக்கு ஆடு பலியிடுவது வழக்கம்.

பொதுமக்களின் வேண்டுதல் நிறைவேறுவதால் நாள்தோறும் ஏராளமான மக்கள் நாள்தோறும் அணைக்கட்டு முனியப்பனுக்கு ஆடு, கோழி பலியிட்டு பொங்கலிட்டு வழிபட்டு வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கானோர் முனியப்பனை தரிசிக்க வந்து செல்கின்றனர். இதனால் நாள்தோறும் மக்கள் கூட்டம் இருப்பதால் நெரிசல் காணப்படுகிறது.

பக்தர்களுக்கு இடையூறாக கடைகளை நடத்தி வரும் வியாபாரிகள்.

இந்நிலையில், சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறாக வியாபாரிகள் முனியப்பன் கோயிலுக்கு செல்லும் பாதையின் இருபுறமும் கடைகளை வைத்துள்ளனர். கடைகளுக்கு மேல் தார்பாய் கூரை அமைத்துக்கொண்டு உணவு விடுதி மற்றும் மீன் வருவல் கடைகளை நடத்தி வருகின்றனர். வியாபாரிகளின் ஆக்கிரமிப்பு காரணமாக நடந்து செல்லவதற்கு கூட முடியாமல் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

மேலும், அணைக்கட்டு முனியப்பனுக்கு பொங்கலிட வரும் பக்தர்களின் வசதிக்காக போடப்பட்ட குடிநீர் குழாய்களில் கடைக்காரர்கள் மீன்கள் சுத்தம் செய்யவும், தங்களின் பாத்திரங்களை துலக்கவும் பயன்படுத்துவதோடு தங்களின் ஹோட்டல்களுக்கு தண்ணீர் எடுக்க ரப்பர் குழாயை செருகி வைத்துக் கொள்கின்றனர். இதனால் பெங்கலிடுவதற்கு  தண்ணீர் கிடைக்காமலும், நடைபாதையில் வியாபாரிகள் கடை விரித்துக்கொள்வதால் பக்தர்கள் பொரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

முனியப்பனுக்கு பொங்கலிட தலையில் தண்ணீர் சுமந்து வரும் பக்தர்.

இதனால் அணைக்கட்டு முனியப்பன் கோயில் நடைபாதையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு குடிநீர் குழாயை ஆக்கிரமிக்கும் வியாபாரிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com