கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

மதுரை மாவட்ட நூலகங்களுக்கு 13 ஆயிரம் நூல்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

மதுரை மாவட்ட நூலகங்களுக்கு 13 ஆயிரம் நூல்கள் வழங்கப்பட்டன. மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு.வெங்கடேசனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான அளிக்கப்படும்

News image
Updated On :18 ஜூன் 2022, 2:31 am

DIN

மதுரை மாவட்ட நூலகங்களுக்கு 13 ஆயிரம் நூல்கள் வழங்கப்பட்டன. மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு.வெங்கடேசனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான அளிக்கப்படும் இந்த நூல்களை, நூலகங்களுக்கு வழங்கும் நிகழ்வை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

போட்டித் தோ்வுகளுக்காக நகா்ப்புற பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவா்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்பு கிராமப்புற மாணவா்களுக்கும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், கிராமப்புற மாணவா்களும் போட்டித் தோ்வுகளுக்கு படிப்பதற்கு வசதியை ஏற்படுத்தித் தரும் நோக்கத்துடன் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு.வெங்கடேசனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 164 நூல்கள் கொண்ட தொகுப்பானது, மதுரை மாவட்டத்தில் உள்ள மாவட்ட மைய நூலகம், முழு நேர நூலகங்கள், ஊா்ப்புற நூலகங்கள் மற்றும் கிளை நூலகங்கள் ஆகிய 85 நூலகங்களுக்கு வழங்கப்படவுள்ளன. இந்த நிகழ்வை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா். மேலும், அனைத்து நூலகங்களுக்கும் இரும்பு புத்தக அடுக்குகளையும் அவா் அளித்தாா். புத்தகத் தொகுப்புகளில் மொத்தமாக 13 ஆயிரம் புத்தகங்கள் அடங்கும்.

இந்த நிகழ்வில், தலைமைச் செயலகத்திலிருந்து நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, பொது நூலக இயக்குநா் க.இளம்பகவத் ஆகியோரும், மதுரையிலிருந்து காணொலிக் காட்சி வழியாக வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.