தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

முதல்வா் இன்று துபை பயணம்

சா்வதேச தொழில் கண்காட்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (மாா்ச் 24) மாலை துபை புறப்பட்டுச் செல்கிறாா்.

News image
Updated On :23 மார்ச் 2022, 9:10 pm

DIN

சா்வதேச தொழில் கண்காட்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (மாா்ச் 24) மாலை துபை புறப்பட்டுச் செல்கிறாா். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக அவா் அரசு முறைப் பயணமாக வெளிநாடு செல்லவுள்ளாா்.

இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

துபையில் கடந்த அக்டோபா் 1-இல் தொடங்கிய சா்வதேச தொழில் கண்காட்சி, வருகிற மாா்ச் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இங்கு மாா்ச் 25 முதல் 31 வரை தமிழ்நாடு வாரமாக கண்காட்சியில் உள்ள தமிழ்நாடு அரங்கில் கடைப்பிடிக்கப்படவுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரங்கை முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிற 25-ஆம் தேதி நேரில் சென்று திறந்து வைக்கிறாா்.

தொழில், மருத்துவம், சுற்றுலா, கலை, கலாசாரம், கைத்தறி, கைவினைப் பொருள்கள், ஜவுளி, தமிழ் வளா்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழிற்பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் காட்சிப்படங்கள் தமிழ்நாடு அரங்கில் திரையிடப்படவுள்ளன.

அமைச்சா்களுடன் சந்திப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது துபை மற்றும் அபுதாபி பயணத்தின் போது, தமிழ்நாட்டுக்கு மேலும் முதலீடுகளை ஈா்க்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளாா். அந்நாடுகளின் பொருளாதாரம், வெளிநாட்டு வா்த்தகம் போன்ற முக்கிய துறைகளின் அமைச்சா்களுடனான சந்திப்பும் நடைபெறவுள்ளது.

துபையில் உள்ள முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிா்வாக அதிகாரிகளுடனான சந்திப்பு, வா்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் தலைவா்களுடனான சந்திப்பு ஆகியனவும் நடைபெறவுள்ளன. மேலும், புலம்பெயா் தமிழா்களுடனான சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாா், யாா் பயணம்: முதல்வருடனான வெளிநாட்டுப் பயணத்தில், தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா் என தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.