
நாமக்கல்: நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கடந்த வாரத்தை விட பருத்தி விலை புதிய உச்சம் தொட்டது.
நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் நடந்த ஏலத்துக்கு திருச்சி, திண்டுக்கல், கரூா், ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
இதில், ஆர்.சி.எச் பருத்தி ரகம் குவிண்டால் ரூ.10,399 முதல் ரூ.13,950 வரை அதிகரித்து விற்பனையானது. கடந்த வாரம் ரூ.13,100 ஆக இருந்த ஆர்.சி.எச் பருத்தி விலை இன்று ரூ.13,900 ஆக அதிகரித்து விற்பனையானது. முந்தைய வாரம் ரூ12,900, ஆக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.