மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைவு

திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைக்கப்பட்டுள்ளது ஆடை தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

News image
Updated On :1 நவம்பர் 2022, 8:11 am

DIN

திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைக்கப்பட்டுள்ளது ஆடை தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருப்பது நூல். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள். நூல் விலை உள்பட மூலப்பொருள்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும். கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி நூல் விலை உயர்ந்து வருகிறது. எனவே, நூல் விலையை குறைக்க தொழில்துறையினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் நடப்பு மாதத்திற்கான (நவம்பர்) நூல் விலையை நூற்பாலைகள் இன்று வெளியிட்டன. இதில், நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்திருந்தது. இதனால் தொழில் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மாதம் ரூ.40 குறைந்த நிலையில் நடப்பு மாதத்திலும் ரூ. 20 குறைந்துள்ளது தொழில் துறையினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

அதன்படி ஒரு கிலோ 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.273-க்கும், 24-ம் நம்பர் ரூ.285-க்கும், 30-ம் நம்பர் ரூ.295-க்கும், 34-ம் நம்பர் ரூ.315-க்கும், 40-ம் நம்பர் ரூ.335-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.265-க்கும், 24-ம் நம்பர் ரூ. 275-க்கும், 30-ம் நம்பர் ரூ.285-க்கும், 34-ம் நம்பர் ரூ. 305-க்கும், 40-ம் நம்பர் ரூ.325-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.