பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிரான தீர்மானத்துக்கு தமிழக காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு திமுக உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இதுதொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இதில் திமுக சார்பில் பொன்முடி, வில்சன், மதிமுக சார்பில் வைகோ, விசிக தலைவர் தொல். திருமாவளவன், ரவிக்குமார், காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், கொங்கு மக்கள் தேசிய கட்சி சார்பில் சின்ராஜ், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன், பாமகவின் பாலு, வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
10% இடஒதுக்கீட்டுக்கு தேசிய அளவில் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் அரசின் தீர்மானத்துக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
சமூக நீதியை நிலைநாட்டும் தமிழக அரசின் கொள்கை முடிவுகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் துணை நிற்கும், தேசிய கண்ணோட்டத்தில், காங்கிரஸ் பார்வை வேறாக இருந்தாலும் தமிழ்நாட்டைப் பொருத்தவரை சமூக நீதி கோட்பாட்டின் அடிப்படையில் ஆதரவு தெரிவிக்கிறோம் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance

விசாரணைக் கைதி ஆகாஷ் மரணம்: 6 காவலர்கள் மீது நடவடிக்கை

ஐபிஎல் 2026: மார்ச் 17 முதல் பயிற்சியைத் தொடங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்!

கல்வி உதவித் தொகைக்கான இணையதளங்கள்!
வீடியோக்கள்

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

