தமிழகத்தில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் படிப்பு (எம்.எட்.) சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு இணையவழியில் வியாழக்கிழமை (அக்.6) முதல் தொடங்கவுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை கல்வியியல் பட்டப்படிப்புக்கான (பி.எட்) விண்ணப்பப்பதிவு இணையவழியில் கடந்த செப். 24-ஆம் தேதி தொடங்கியது. இதற்கான தரவரிசை பட்டியல் வியாழக்கிழமை வெளியாகும் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, தற்போது முதுநிலை கல்வியியல் படிப்புக்கான (எம்.எட்) மாணவர் சேர்க்கையும் தொடங்கியுள்ளது. இதையடுத்து, மாணவர்கள் அக்.6}ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் அக். 12 வரை www.tngasaedu.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
அதன் தொடர்ச்சியாக தரவரிசைப் பட்டியல் அக். 15-ஆம் தேதி வெளியிடப்படும்.
மேலும், முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு அக்.18 முதல் தொடங்கும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றிலை, பாக்கு வைத்து வாக்களிக்க அழைப்பு
உங்கள் அடையாளத்தைப் பாதுகாத்திடுங்கள்: தமிழக மக்களிடம் ராகுல் காந்தி வேண்டுகோள்!

ஜனநாயகக் கடமை ஆற்றத் தயாரா? சென்னையில் இரு நாள்களில் 9 லட்சம் பேர் பயணம்!

எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் லாபம் ரூ. 805 கோடி!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


