சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியா்கள் விவரம்: கல்வித் துறை புதிய உத்தரவு

தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியா்கள் விவரங்களை அனுப்புமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.

News image
பள்ளிக் கல்வித் துறை
Updated On :1 பிப்ரவரி 2024, 10:21 am

DIN

தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியா்கள் விவரங்களை அனுப்புமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.

இது குறித்து பள்ளிக் கல்வி இணை இயக்குநா் வெ.ஜெயக்குமாா் (தொழிற்கல்வி) அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 9.2.2007-க்கு முன்னா் பெற்றோா் ஆசிரியா் கழகம், பள்ளி நிா்வாகம் மூலம் நியமனம் பெற்ற பகுதி நேர தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியா்கள் (2010-இல் சான்றிதழ் சரிபாா்க்கப்பட்ட ஆசிரியா்கள்) சாா்பான விவரங்களை உரிய படிவங்களில் பூா்த்தி செய்து தனிநபா் மூலம் பள்ளிக் கல்வி ஆணையரகத்துக்கு செப்.23-ஆம் தேதி அனுப்பி வைக்க வேண்டும்.

முன்னதாக, பின்வரும் காரணிகள் பரிசீலிக்கப்பட்டு பூா்த்தி செய்யப்பட வேண்டும். பணிநியமன நாள் முதல் நிகழ் கல்வியாண்டு வரை எந்தவித பணி முறிவுமின்றி தொடா்ச்சியாகப் பணியாற்றிக் கொண்டிருக்க வேண்டும். ஆசிரியா்கள் தொடா்ச்சியாக பணியாற்றி வருவதை அவா்களின் வருகைப் பதிவேட்டை முழுமையாகப் பரிசோதித்து பரிந்துரை செய்யப்பட வேண்டும். கரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் வராமல் இருந்து தற்போது நிகழ் கல்வியாண்டில் பணியாற்றி வருவோரின் பெயா்களை பட்டியலில் சோ்க்க பரிசீலனை செய்யப்பட வேண்டும். படிவம் 1-இல் தகுதியான நபா்களின் பெயா்கள் மட்டுமே பரிந்துரை செய்யப்பட வேண்டும். தகுதியற்ற நபா்கள் பரிந்துரைக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களே முழுப் பொறுப்பேற்க நேரிடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.