செங்கல்பட்டு, தாம்பரம் செல்லும் ரயில்கள் 3ஆவது நடைமேடையில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை கடற்கரை-தாம்பரத்துக்கு இயக்குவதற்காக ஒரு மின்சார ரயில், பணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 4.25 மணிக்கு வந்துகொண்டிருந்தது. இந்த ரயில், நிலையத்தின் ஒன்றாவது நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தது. இந்த ரயிலை சங்கர் என்பவர் இயக்கினார். ஒன்றாவது நடைமேடைக்கு வந்தபோது, இந்த ரயில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்து நடைமேடையில் ஏறி,கட்டடத் தில் மோதி நின்றது.
இதையும் படிக்க- பாகிஸ்தானின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராகிறார் பிலாவல் புட்டோ
இந்த சம்பவத்தின் போது,ரயிலில் யாரும் இல்லாததால் எந்தவித உயிர் சேதம் ஏற்படவில்லை. அதேநேரத்தில் ஓட்டுநர் காயமடைந்தார்.இந்த விபத்தில் இரண்டு பெட்டிகள் சேதமடைந்தன. மேலும், நடைமேடையில் இருந்த கடைகள் சேதமடைந்தன. சேதமடைந்த பெட்டிகளை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து ரயில் பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே ஒன்றாம் நடைமேடைக்கு வரும் ரயில்கள் மாற்ற நடைமேடைகளில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, தாம்பரம் செல்லும் ரயில்கள் 3ஆவது நடைமேடையில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்

‘இண்டி’ கூட்டணி கூட்டம்: திமுக பங்கேற்காது - கட்சித் தலைமை அறிவிப்பு

ரூ. 10 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்; 3 போ் கைது

பல்லடத்தில் தேநீா்க் கடைக்குள் புகுந்த அரசுப் பேருந்து
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



