தேனி மாவட்டத்தில் நவீன அரிசி ஆலை அமைக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு - முழு விவரம்

தேனி மாவட்டத்தில் அதிக அளவில் நெல் உற்பத்தியாவதைக் கருத்தில் கொண்டு, வேளாண் பெருமக்களுக்கு உதவக்கூடிய வகையில் நவீன அரிசி ஆலை உருவாக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
தேனியில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்.
தேனியில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்.

தேனி மாவட்டத்தில் அதிக அளவில் நெல் உற்பத்தியாவதைக் கருத்தில் கொண்டு, வேளாண் பெருமக்களுக்கு உதவக்கூடிய வகையில் நவீன அரிசி ஆலை உருவாக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

பல்வேறு திட்டங்களை தொடக்கி வைப்பதற்காக தேனி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் அரப்படித்தேவன்பட்டியில் உள்ள நியாய விலைக் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கடையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு விவரம் குறித்து ஆய்வு செய்து மக்களிடம் வழங்கப்படும் பொருள்களின் தரம் குறித்து கேட்டறிந்தார். 

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் அரப்படித்தேவன்பட்டியில் உள்ள நியாய விலைக் கடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் அரப்படித்தேவன்பட்டியில் உள்ள நியாய விலைக் கடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் தேனி ஊராட்சி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற  விழாவில் ரூ.114.21 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 40 திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.74.21 கோடி மதிப்பீட்டிலான 102 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 10,427 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடக்கி வைக்கிறார் முதல்வர்
பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடக்கி வைக்கிறார் முதல்வர்

இதன்பின்னர் விழாவில் பேசிய அவர் திமுக அரசு செய்த சாதனைகளை பட்டியலிட்டுப் பேசினார். பின்னர் தேனி மாவட்டத்திற்கு செய்யப்பட்ட திட்டங்களையும் அதைத்தொடர்ந்து இனி செய்யவிருக்கக்கூடிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். 

அதன்படி, 

♦ தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அரசு மருத்துவமனை 8 கோடி ரூபாய் செலவிலும், உத்தமபாளையம் அரசு மருத்துவமனை 4 கோடி ரூபாய் செலவிலும் மேம்படுத்தப்படும்.

♦  போடிநாயக்கனூர் வட்டம், மஞ்சநாயக்கன்பட்டி அருகில் கொட்டக்குடி ஆற்றின் அருகே 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்படும்.

♦  ஆண்டிபட்டியிலுள்ள வைகை உயர் தொழில்நுட்ப விசைத்தறி பூங்காவைத் தொடர்ந்து சிறப்புற செயல்படச் செய்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டு அதுவும் செயல்படுத்தப்படும்.

♦ தேனி மாவட்டத்தில் அதிக அளவில் நெல் உற்பத்தியாவதைக் கருத்தில் கொண்டு, வேளாண் பெருமக்களுக்கு உதவக்கூடிய வகையில் நவீன அரிசி ஆலை உருவாக்கப்படும். 

♦  வீரநாயக்கன்பட்டியில் உள்ள குறவர்கள் காலனி திட்டப் பகுதியில், நரிக்குறவர் மற்றும் குறவர்களுக்காக குடியிருப்பு கட்டப்படும். 175 குடியிருப்புகளுக்கான பயனாளிகளின் பங்களிப்புத் தொகை 3.5 கோடி ரூபாயை முதற்கண் அரசு அளித்திருக்கிறது. பின்பு எளிதான சிறு தவணைகளில் அவர்கள் திருப்பிச் செலுத்திட வழிவகை செய்யப்படும். 

♦  அதிக அளவில் பயணியர் வந்துசெல்லக்கூடிய குமளி பேருந்து நிலையம் 
7.5 கோடி செலவில் மேம்படுத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com