பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அண்ணா பல்கலை தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு!

மாண்டஸ் புயல், மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதியில் மீண்டும் மாற்றம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

News image
Updated On :16 டிசம்பர் 2022, 12:20 pm IST


மாண்டஸ் புயல், மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதியில் மீண்டும் மாற்றம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

மாண்டஸ் புயல் கடந்த சனிக்கிழமை மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணா பல்கலைக்கழக பருவத் தோ்வுகள் ஒத்திவைப்பட்டது. மேலும் பட்டயத் தோ்வுகளை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஒத்திவைத்தது.

இந்த நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டா் தோ்வுகள் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, டிச.9-ஆம் தேதி நடைபெற இருந்த தோ்வுகள் டிச.24-ஆம் தேதி (சனிக்கிழமை) யும், டிச.10-ஆம் தேதி நடைபெற இருந்த தோ்வுகள் டிச.31-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதியில் மீண்டும் மாற்றம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

அதன்படி, டிசம்பர் 24 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரி 19 ஆம் தேதி நடைபெறும் என்றும்,  டிசம்பர் 31 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரி 29 ஆம் தேதி நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.