அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கோபாலபுரம் கருணாநிதி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டிற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :5 பிப்ரவரி 2022, 3:39 pm

DIN

சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டிற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்ம நபர் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் உடனடியாக அந்த தொலைப்பேசி இணைப்பை துண்டித்துவிட்டார். 
இந்த மிரட்டலைத் தொடர்ந்து சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். 

மேலும் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என கண்டுபிடிக்கப்பட்டது. 
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து தேனாம்பேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மிரட்டலால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.