உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை தேவை: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்களின் மீது ரஷியப் படைகள் தாக்குதல் நடத்திவரும் நிலையில் இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுமாறு இந்தியத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 5000 மாணவர்கள் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து குடியேறியவர்களின் குடும்பத்தினரிடமிருந்து நூற்றுக்கணக்கான துயர அழைப்புகள் வந்துகொண்டு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் உக்ரைனில் விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் சூழலில் அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கு ஒன்றிய அரசின் உதவி தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு 24 மணி நேர உதவி மையங்களைத் திறந்துள்ளது என்றும், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழர்களின் குடும்பங்களை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைக்கவும், அவர்களை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றுவதற்கும் மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய அளவில் ஒருங்கிணைப்பு பணிகளுக்கென்று ஓர் இணைப்பு அலுவலரை தமிழ்நாட்டுக்கென்று அறிவிக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார்.

மேலும் வந்தே பாரத் போன்ற சிறப்பு விமானங்களை இயக்க ஒன்றிய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com